சென்னை: மெதுவாக குறைந்த தங்கம் விலை

73பார்த்தது
சென்னை: மெதுவாக குறைந்த தங்கம் விலை
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 8, 230 ரூபாய்க்கும், சவரன், 65, 840 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 110 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 15 ரூபாய் குறைந்து, 8, 215 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 120 ரூபாய் சரிவடைந்து, 65, 720 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

இந்நிலையில், இன்று (மார்ச் 25) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து, ஒரு சவரன் ரூ. 65, 480க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ. 30 குறைந்து, ஒரு கிராம் ரூ. 8, 185க்கும் விற்பனை செய்கிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 சரிந்துள்ளது.

தொடர்புடைய செய்தி