சென்னை: இன்ஸ்டாகிராமில் ஆபாச மெசேஜ் அனுப்பியவர் கைது

58பார்த்தது
சென்னை: இன்ஸ்டாகிராமில் ஆபாச மெசேஜ் அனுப்பியவர் கைது
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வரும் 21 வயது பெண்ணிற்கு கடந்த 27.08.2024 ஆம் தேதி Rtr Mani Ketavanmani என்ற இன்ஸ்டாகிராம் ID-யிலிருந்து தவறான மெஸேஜ் வந்ததாக தெரிகிறது. அதனை அந்த பெண் பிளாக் செய்து விட்டதாகவும், மீண்டும் 02.11.2024 ஆம் தேதி அதே ID-யிலிருந்து வீடியோவின் கமெண்ட் செக்ஷனில் அவதூறாகவும், அருவருக்கதக்க வகையிலும் மெஸேஜ் வந்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார். 

எனவே அந்த நபரினை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மண்டல சைபர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த பெண் புகார் அளித்ததை தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Rtr Mani Ketavanmani என்ற ஐடியை பதிவிட்டவரை பற்றிய தகவல் வேண்டி Meta Platformக்கு மெயில் அனுப்பப்பட்டு அதன் அடிப்படையில் IP Address-ன் Mail ID, Phone Number, அதன் Network User ID முகவரி ஆகியவற்றை சைபர் கிரைம் போலீசார் பெற்றனர். விசாரணை மேற்கொண்டதில் இந்த வழக்கில் தொடர்புடைய கொடுங்கையூரைச் சேர்ந்த திவாகர் (29) என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி