சென்னை: மகனை கத்தரிக்கோலால் குத்தியவர் கைது

0பார்த்தது
சென்னை: மகனை கத்தரிக்கோலால் குத்தியவர் கைது
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் வசிக்கும் 50 வயதான விவேகானந்தர், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதைத் தட்டிக்கேட்ட அவரது மகன் உதயகுமாரை (20) கத்திரிக்கோலால் குத்தி படுகாயப்படுத்தினார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உதயகுமாரின் புகாரின்பேரில், போலீசார் விவேகானந்தரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி