பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய முதல்வர்

7பார்த்தது
பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய முதல்வர்
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், பட்டு விவசாயிகள், பட்டு நூற்பாளர்கள் மற்றும் விதைக்கூடு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் சிறந்த மூன்று பட்டு விவசாயிகள், சிறந்த இரண்டு விதைக்கூடு உற்பத்தியாளர்கள், சிறந்த மூன்று தானியங்கி பட்டு நூற்பாளர்கள் மற்றும் சிறந்த மூன்று பலமுனை பட்டு நூற்பாளர்கள் என மொத்தம் 11 விருதாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார். இந்த விருதுகள் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பட்டுவளர்ச்சித் துறையின் சார்பில் வழங்கப்பட்டன.