சென்னை அசோக் நகரில் 2008 ஆம் ஆண்டு நடந்த மூவர் கொலை சம்பவத்திற்குப் பிறகு பாழடைந்த வீட்டில் இளைஞர்கள் அத்துமீறி நுழைந்து அமானுஷ்ய வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து, அந்தப் பாழடைந்த பங்களாவிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மீறி நுழைபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.