சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ராபார்ட்(28) என்பவர், சில மாதங்களாக வாடகை செலுத்தாததால் வீட்டின் பெண் உரிமையாளர் அவரிடம் வாடகை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராபார்ட், வீட்டின் உரிமையாளரின் புகைப்படத்தை செல்போனில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் ராபார்ட்டை கைது செய்துள்ளனர்.