வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த செர்ரி பழங்கள், முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி இளமையான தோற்றத்தை தரவல்லது. இதிலுள்ள இயற்கையான ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்து, கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை குறைத்து முகத்திற்கு தனி பொலிவை அளிக்கிறது. எனவே, செர்ரி பழங்களை உணவில் சேர்த்து கொள்வதுடன், அதன் சாற்றை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், மென்மையான மற்றும் பளபளப்பான அழகிய சருமத்தை எளிதாக பெறலாம்.