சத்ரபதி சிவாஜி பிறந்தநாள் விழா கூட்ட நெரிசலில் பெண்கள் காயமடைந்தனர். மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறந்த இடமான ஜுன்னாரில் உள்ள சிவனேரி கடாவில் ஜெயந்தி விழா நேற்று (பிப்., 18) கொண்டாடப்பட்டது. அங்கு மாநிலம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் கோட்டையில் குவிந்திருந்தனர். இதனால் அம்பர்கானே பகுதியில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட பல பொதுமக்கள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.