ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவப் பிரியர்களின் வீடுகளில் மதிய உணவுக்குத் தனி மவுசு தான், அதிலும் மொறுமொறுப்பான "சிக்கன் 65" இருந்தால் அந்த நாளே ஸ்பெஷலாக மாறிவிடும். சுத்தம் செய்த கோழி இறைச்சியுடன் இஞ்சி-பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், கரம் மசாலா, கான்ஃப்ளோர் மாவு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக ஊறவைத்து எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான சிக்கன் 65 தயார்.