சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சிக்கன் விலை இன்று (பிப்.22) கணிசமாக குறைந்து, தோல் நீக்கிய கறி ஒரு கிலோ ரூ.200 முதல் 220 வரை விற்பனை செய்யப்படுகிறது. பறவை காய்ச்சல் அச்சம் மற்றும் கோடை வெயில் அதிகரிப்பு காரணமாக மக்களிடையே நுகர்வு குறைந்துள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. கறிக்கோழி மட்டுமின்றி முட்டை விலையும் ரூ.6 குறைந்துள்ளதால், இல்லத்தரசிகள் மற்றும் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.