மத்திய பாஜக அரசு "மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று" என்ற பெயரில், தமிழ் மற்றும் ஆங்கில பெயர்களை இந்தியில் எழுதி மறைமுகமாக இந்தியை திணிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். தமிழர்களின் சுயமரியாதையை சீண்டும் இச்செயலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என தனது X தளத்தில் அவர் எச்சரித்துள்ளார். மொழியுரிமையை காக்க தமிழகம் என்றும் முன்னிற்கும் என்றும் அவர் தனது பதிவில் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.