சென்னை அண்ணா அறிவாலயம் வளாகத்தில், மு.க. ஸ்டாலின் தலைமையில் தேர்தல் மண்டல பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இதில் கனிமொழி MP, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வா.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சட்டமன்றத் தேர்தல் விருப்பமனு மற்றும் தொகுதி பணிகள் குறித்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.