விருதுநகரில் நாளை (பிப்.6) நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாட்டிற்கு தொண்டர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுகவை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த அணியில் களமாடியவர்களே, இன்று அமைச்சர்களாக உயர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், இந்த மாநாடு கட்சியின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.