ஈரோடில் ரூ.605 கோடி மதிப்பிலான பணிகளை திறந்து வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், பெரியார் இல்லையேல் தமிழ்நாட்டின் வளர்ச்சி சாத்தியமே இல்லை என கூறியுள்ளார். மேலும், ஈரோடு மண்டலத்தில் 400 கோவில்களுக்கு 500-க்கும் மேற்பட்ட பணிகள் நடப்பதாகவும், பெண்கள் உரிமைத் திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15 முதல் ரூ.1000 வழங்கப்படும் என்றும் கூறினார். 4 ஆண்டுகளில் ரூ.9,327 கோடி வளர்ச்சி திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.