தவெக அரசு பெரும்பான்மைக்காக
பாஜக மாடலைப் பின்பற்றுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள தவெக, அவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஆதரவை விலக்கலாம் என்பதால் அதிமுக எம்.எல்.ஏ-க்களை இழுப்பதாகக் கூறப்படுகிறது. 2019 கர்நாடகா, 2020 மத்தியப் பிரதேசத்தில்
பாஜக செய்த ஆபரேஷன் தாமரை போன்ற குதிரை பேர அரசியலைத் தற்போது முதல்வர்
விஜய் கையில் எடுத்துள்ளதாக விமர்சகர்கள் சாடியுள்ளனர்.