செவ்வாயின் ஆதிக்கத்தைக் குறிக்கும் '9' என்ற எண்ணிக்கையில் தவெக ஆட்சியில் முதல்கட்டமாக ஒன்பது அமைச்சர்கள் பதவியேற்றுள்ளதாக ஜோதிடர் ஷெல்வி கூறியுள்ளார். முதல்வர் ஜோசப் விஜய் கையில் கட்டியிருக்கும் சிவப்பு கயிறு ராகுவின் ஆதிக்கத்தைக் குறிப்பதுடன், அவருக்குப் பேராற்றலை வழங்கும் என்றார். 2028 இறுதி வரை கிரக அமைப்புகளால் நிர்வாகத்தில் சில தடைகள் எழும் என்பதால், விஜய் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சுக்கிர திசை நடப்பதால் ஆட்சி கவிழ வாய்ப்பே இல்லை என்றும் அவர் கணித்துள்ளார்.