தமிழக அமைச்சர்களாக பொறுப்பேற்ற 10 (முதல்வர் உட்பட) பேருக்கு இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்து ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
திமுக ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது 34 அமைச்சர்கள் இருந்த நிலையில், தற்போது 10 பேருக்கான இலாக்காக்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மீதமுள்ள அமைச்சர் பதவிகளுக்கு யார் யாரை தேர்ந்தெடுக்கலாம் என்ற ஆலோசனையில் முதல்வர் ஜோசப்
விஜய் ஈடுபட்டுள்ளதாகவும் , விரைவில் மற்ற அமைச்சர்கள் பட்டியல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.