சென்னை நெம்மேலியில் ரூ.342.60 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள 'மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.19) அடிக்கல் நாட்டினார். பின்னர் விழாவில் பேசிய அவர், திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகளை பட்டியலிட்டதுடன், "திமுக ஆட்சியில் அணைகளே கட்டப்படவில்லை" என்று கூறுவது அப்பட்டமான பொய் என விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். சென்னையின் 6-வது நீர்த்தேக்கமாக உருவாகும் இத்திட்டம், நகரின் நீர் ஆதாரத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.