மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு இன்று (பிப்., 25) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நல்லகண்ணு உடல் வைக்கப்பட்டுள்ளது. நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, எம்.பி., கனிமொழி மற்றும் திமுகவினர் அஞ்சலி செலுத்தி, சிபிஐ கட்சியினர் மற்றும் நல்லகண்ணுவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.