கோவையில் செம்மொழிப்பூங்கா மற்றும் தொழில் முதலீடு மாநாடு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு வந்தடைந்தார். மாவட்ட எல்லையான விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே அமைச்சர் முத்துசாமி தலைமையில் திமுகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நாளை (நவ., 16) நடக்க உள்ள அரசு நிகழ்ச்சியில், முதலமைச்சர் ரூ.605.44 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.