சென்னை: அனைத்துலக வள்ளலார் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 7 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ‘காஞ்சி ஏகாம்பரநாதர் பள்ளியில் நினைவுத்தூண் அமைக்கப்படும், வடலூரில் சன்மார்க்க பயிற்சி பள்ளி அமைக்கப்பட்டு அப்பள்ளியில் திருவருட்பா இசை பயிற்சியும் அளிக்கப்படும், வள்ளலார் பிறந்த நாளை ஒட்டி ஆண்டுதோறும் 3 நாட்கள் விழா நடத்தப்படும், வடலூரில் வள்ளலார் பெயரில் மூலிகை தோட்டம் அமைக்கப்படும்’ உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.