கோவை மாவட்டத்தில் வாகை சூட வேண்டுமென திமுக நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை தொகுதி திமுக நிர்வாகிகளுடன் இன்று (நவ., 18) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அதிமுக கோட்டையாக உள்ள கோவையில் திமுக தீவிரமாக களப்பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.