கேரள புதிய முதல்-மந்திரி வி.டி.சதீசன்
பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று (மே 26) நேரில் சந்தித்து பேசினார். கேரளாவில்
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று அவர் பதவியேற்ற பிறகு, பிரதமரை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இந்த சந்திப்பின் போது, கேரளாவின் எதிர்கால வளர்ச்சிக்கு மத்திய அரசின் முழு ஆதரவையும் உதவிகளையும் அவர் கோரியதோடு, பிரதமருக்கு நினைவுப் பரிசாகப் பாரம்பரிய கதகளி சிலையையும் வழங்கினார்.