இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.175.23 கோடி மதிப்பீட்டில் 16 திருக்கோயில்களில் 22 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்., 26) அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.215.79 கோடி செலவில் 21 திருக்கோயில்களில் 53 முடிவுற்ற திருப்பணிகள் மற்றும் அலுவலகக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.