ரூ.98.92 கோடி மதிப்பில் மீன்பிடி உட்கட்டமைப்பு.. திறந்து வைத்த முதலமைச்சர்

3576பார்த்தது
ரூ.98.92 கோடி மதிப்பில் மீன்பிடி உட்கட்டமைப்பு.. திறந்து வைத்த முதலமைச்சர்
சென்னை: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.98.92 கோடி செலவில் கன்னியாகுமரி, மயிலாடுதுறை, தென்காசி மாவட்டங்களில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மீன் இறங்குதளம் மற்றும் புதிய மீன் விதைப் பண்ணை ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை இன்று (டிச.8) தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன் மூலம் 68,300 மீனவர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி