சென்னை கொளத்தூர் தொகுதியில் இன்று (ஜன.10) நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று சிறப்பித்துள்ளார். கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் இந்த பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. முன்னதாக பொங்கல் வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், பசுக்களுக்கு உணவுகளை வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளையும் வழங்கினார்.