விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் இன்று (பிப்.7) நடைபெறும் திமுக தென்மண்டல இளைஞரணி மாநாட்டில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்காக முதலமைச்சர் தற்போது மதுரை விமான நிலையம் வருகை தந்துள்ளார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் நிர்வாகிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டிற்காக 300 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.