திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் இன்று (பிப்.14) மாலை திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரயிலில் பயணிக்கவுள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிருந்தாவன் விரைவு ரயிலில், முதலமைச்சர் ஜோலார்பேட்டைக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.