டி.கே.சிவக்குமாருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

12பார்த்தது
டி.கே.சிவக்குமாருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து
கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.கே.சிவக்குமாருக்கு தமிழக முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 'கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப்  பொறுப்பேற்றுள்ள டி.கே. சிவகுமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் தவெக கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் 2 அமைச்சர்களுடன் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.