டாஸ்மாக், போதைப்பொருள் தடுப்பு, பெண்கள் பாதுகாப்பு, சமூக வலைதளங்கள், பத்திரப்பதிவு உள்ளிட்ட 6 முக்கிய துறைகளைக் கண்காணிக்கச் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளார். காவல்துறை தலைமையகத்தில் இருந்து செயல்படும் இவர்கள், அன்றாட நடவடிக்கைகளை நேரடியாகக் கண்காணிப்பார்கள். டாஸ்மாக் கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்கவும், பெண்கள் மீதான வழக்கு விசாரணைகளைக் கண்காணிக்கவும் இதில் தனி கவனம் செலுத்தப்படும்.