மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு எலப்பாக்கம் பகுதியில் இன்று (அக்.2) ரோடு ஷோ மேற்கொண்ட CM
விஜய், பிரச்சாரத்தின் போது திடீரென வயலில் இறங்கி டிராக்டரை ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேளாண் தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டும் வகையில் அவர் டிராக்டர் ஓட்டிய காட்சி அப்பகுதியில் இருந்தவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. எளிய முறையில் மக்களுடன் நேரடியாக கலந்துரையாடி CM
விஜய் வாக்கு சேகரித்த இந்த சம்பவம், தொண்டர்களிடையேயும் அப்பகுதி விவசாயிகளிடையேயும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.