கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியின் டிரிபிள் ஜம்ப் பிரிவில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்குச் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்
விஜய் ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினார். வெள்ளிப் பதக்கம் வென்ற திருவாரூரைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேலுக்கு ₹30 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்ற மதுரையைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கு ₹20 லட்சமும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் பயின்ற இவ்விரு வீரர்களின் சாதனை தேசத்திற்கே பெருமை சேர்ப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.