தமிழ்நாட்டின் மின் தேவை மற்றும் மின் உற்பத்தி நிலை தொடர்பாக முக்கிய ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் C.T.R. நிர்மல் குமார், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர். கோடைகாலத்தில் அதிகரிக்கும் மின் பயன்பாட்டை சமாளிப்பது, தடையற்ற மின்விநியோகம், புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் மற்றும் மின்சார சேமிப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.