சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதலமைச்சர்
விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மகப்பேறு சிகிச்சை வசதிகள், சிகிச்சையின் தரம், மருந்துகள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு தரமான சிகிச்சையும், விரைவான சேவையும் வழங்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது அங்குள்ள நோயாளிகள், பொதுமக்கள் பெருந்திரளாக திரண்டு முதலமைச்சரை நோக்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முதலமைச்சர்
விஜய் இதே மருத்துவமனையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.