சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர்
விஜய் நாளை (மே 29) தொடங்கி வைக்கிறார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நாளை மாலை 5 மணிக்கு திட்டத்தை தொடங்கி வைத்து முதலடைச்சர் உரையாற்றுவார். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக சிறப்பு படையை தவெக அரசு அமைத்துள்ளது. சிங்கப்பெண் படையில் இடம்பெறும் காவலர்களுக்கு கருநீல நிற சட்டை, காக்கி பேண்ட், பிரத்யேக கேமரா கருவி, தொப்பி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதற்கென சிறப்பு ரோந்து வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன.