கரூரில் ரூ.1,700 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ள காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதலமைச்சர்
விஜய் இன்று (ஜூலை.10) அடிக்கல் நாட்டினார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், காணொளி வாயிலாக இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். புதிய தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வந்த பிறகு சுமார் 13,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.