மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் தவெகவுக்குச் சவாலாக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், முதலமைச்சர்
விஜய் இன்று மாலை அங்கு தீவிரப் பிரசாரம் மேற்கொள்கிறார். இப்பிரசாரத்தில் திமுகவைக் குறிவைத்து ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக அவர் பேசுவார் என்றும், மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது உள்ளிட்ட முக்கியக் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவரது தேர்தல் உரை
அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.