தமிழ் சினிமா நடிகரும், தூத்துக்குடி எம்எல்ஏவுமான ஸ்ரீநாத் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் நண்பரான ஸ்ரீநாத் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு
திமுக அமைச்சராக இருந்த கீதா ஜீவனை தோற்கடித்தார். இந்த சூழலில் தற்போது தவெக அமைச்சரவை விரிவாக்க பட்டியலில் ஸ்ரீநாத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு என்ன துறை ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.