தமிழகத்தில் முதலமைச்சர்
விஜய் தலைமையிலான தவெக அரசில் முதலமைச்சர் உள்ளிட்ட 10 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்ட நிலையில், பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், தவெக மற்றும்
காங்கிரஸ் எம்எல்ஏக்களைக் கொண்டு அமைச்சரவை இன்று (மே 21) விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், தவெக மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த 20 அமைச்சர்கள் பொறுப்பேற்பார்கள்.