டெல்லியில்
பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர்
விஜய், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியுள்ளார். அதில், ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு
இந்தியா கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே பாட உள்துறை அமைச்சகம் உரிய தெளிவுரை வழங்க வேண்டும், மேகதாது அணைத் திட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும், இலங்கை கடற்படை கைது செய்துள்ள தமிழக மீனவர்களை மீட்டுத்தரவும் வலியுறுத்தியுள்ளார்.