மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, முதலமைச்சர் விஜய் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட உள்ளார். இதற்காக மாமண்டூரில் தொடங்கி மதுராந்தகம் வரை சுமார் 35 கிராமங்கள் மற்றும் ஊர்கள் வழியாக விரிவான ரோடு ஷோ நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தலைவர் விஜய்யின் இந்த ரோடு ஷோ பிரசாரம் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.