தற்போது நீலாங்கரையில் வசித்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர்
விஜய், ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அரசு இல்லமான 'பாமணி' பங்களாவிற்கு விரைவில் குடியேறவுள்ளார். முதலமைச்சரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், நிர்வாக பணிகளை எளிமையாக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி அரசு தொடர்பான அவசர கால கூட்டங்கள் மற்றும் முக்கிய ஆலோசனைகள் அனைத்தும் இந்த பாமணி இல்லத்திலேயே நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.