வயலில் இறங்கி பெண்களிடம் வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்

7பார்த்தது
மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு CM விஜய், அத்தொகுதியில் இன்று (அக்.2) ரோடு ஷோ பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வழியில் திடீரென தனது பிரச்சார வாகனத்தை நிறுத்தி விவசாய நிலத்திற்குள் இறங்கி சென்றுள்ளார். அங்கு விவசாய பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்களை நேரில் சந்தித்து, அவர்களின் நலம் விசாரித்ததுடன் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துள்ளார். முதலமைச்சர் விஜய்யின் இந்த நடவடிக்கை, அப்பகுதி மக்களிடையேயும் தொண்டர்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நன்றி:PT

தொடர்புடைய செய்தி