180 இடங்களில் வெற்றி பெற்று முதல்வர் விஜய் ஆட்சியமைப்பார் - வைகோ

7பார்த்தது
180 இடங்களில் வெற்றி பெற்று முதல்வர் விஜய் ஆட்சியமைப்பார் - வைகோ
மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடந்தால் 180 இடங்களில் வெற்றி பெற்று முதலமைச்சர் விஜய் ஆட்சியமைப்பார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், இன்னொரு முறை தேர்தல் வந்தால் 180 இடங்களுக்கு குறையமால் வெற்றி பெற்று முதலமைச்சர் விஜய் ஆட்சியமைப்பார். ஊழலற்ற, மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை வழங்கி வரும் அரசுக்கு மதிமுக தொடர்ந்து அரணாக நின்று தனது முழு ஆதரவை வழங்கும் என கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதில் இருந்தே வைகோ பரபரப்பு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி