முதலமைச்சர் விஜயை இன்று (மே.22) சந்தித்த MRF நிறுவனத்தினர், விராட் கோலி கையொப்பமிட்ட
கிரிக்கெட் பேட்டை நினைவுப்பரிசாக வழங்கினர். முதலமைச்சர் அந்த பேட்டை உற்சாகமாக பெற்றுக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த சந்திப்பு பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், “விராட் பேட்டுடன் முதலமைச்சர்” என்ற தலைப்பில் பதிவுகள் பரவி வருகின்றன.