தவெக தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவது குறித்த தீர்மானத்துக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். "ஒரு கட்சி ஆரம்பிக்கவேண்டும் என்றால், அந்த கட்சி தலைவர் தனித்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும். தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும், யார் முதலமைச்சராக வர வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.