தீபாவளியையொட்டி அக்டோபர் 22-ம் தேதி அரசு விடுமுறை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் அரசுக்கு இன்று (அக்.14) கோரிக்கை விடுத்துள்ளது. பண்டிகைக்காக வெளியூர் சென்றவர்கள் அக்டோபர் 22-ம் தேதி பணிக்கு திரும்புவதில் சிரமம் உள்ளது என கூறி இந்த விடுமுறை கோரப்பட்டுள்ளது. அக்டோபர் 22 அன்று விடுமுறை அளிக்கப்பட்டால், ஊழியர்கள் சொந்த ஊரிலிருந்து திரும்புவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.