பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்: மீனவர்கள் இன்று ஆலோசனை

2பார்த்தது
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்: மீனவர்கள் இன்று ஆலோசனை
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் தவெக அரசின் திட்டத்துக்கு மீனவர்கள், பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில், 9 கிராம மீனவர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கும் என்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. ரூ.1,200 கோடி மதிப்பில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் தலைமைச் செயலகம் கட்ட அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி