சிக்குன் குனியா பாதிப்பு அதிகரிப்பு: பூச்சியியல் வல்லுநர்கள் ஆய்வு

0பார்த்தது
சிக்குன் குனியா பாதிப்பு அதிகரிப்பு: பூச்சியியல் வல்லுநர்கள் ஆய்வு
2018 முதல் ஆண்டுக்கு 250 முதல் 700 பேர் மட்டுமே சிக்குன் குனியா பாதிப்புக்குள்ளாகினர். கடந்த ஆண்டு இறுதியில் பாதிப்பு விகிதம் உயர்ந்துள்ளது. கொசுக்களின் வைரஸ் தன்மை வீரியமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கொசுக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதா, வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதா என பூச்சியியல் வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்குன் குனியா அதிகரித்துள்ளது. கொசு ஒழிப்பே நோய்களைத் தடுப்பதற்கான ஒரே வழி என வலியுறுத்தப்படுகிறது.
Job Suitcase

Jobs near you