திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜூ பிஸ்வ கர்மாவிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார், இன்று (ஜூலை.29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையில் நீதிமன்ற வளாகத்தில் ராஜூவை வழக்கறிஞர்கள், தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.